மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி ஆகிருச்சே.. உண்மைக் கதையால் நடிகர் பிருத்விராஜ்க்கு ஏற்பட்ட சிக்கல்! அதிர்ச்சியில் படக்குழுவினர்!
பிரபல நடிகரான ப்ருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடுவா. இப்படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், சீமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய கடுவாகுன்னெல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு தடைவிதிக்க கோரி கடுவாகுன்னெல் குருவச்சன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதில் அவர், தனது வாழ்க்கை கதையை ரஞ்சித் பணிக்கர் படமாக எடுக்க அனுமதி கேட்டார். அப்பொழுது பழிவாங்கும் நோக்கில் தான் செயல்பட்டது போல காட்டாமல் உண்மை தன்மையோடு படத்தை எடுக்க வேண்டும் எனவும், எனது கேரக்டரில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும் எனவும் பல நிபந்தனையோடு அனுமதித்தேன்.
ஆனால் என் அனுமதி இல்லாமல் பிருத்விராஜ் இயக்கத்தில் ஷாஜி கைலாஷ் எனது கதையை படமாக இயக்கியுள்ளார். மேலும் இதன் டீசரில் எனது கேரக்டர் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதனை விசாரித்த நீதிமன்றம் கடுவா படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.