திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குட்டி பொண்ணா இது.. அடுத்த ஹீரோயின் ரெடி தான் போல.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி ஹிட் திரைப்படங்களை அளித்து வருகிறார். இவரின் இயக்கத்திற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றது.
இது போன்ற நிலையில், 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் கைதி. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
மேலும் படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் தான் மோனிகா என்ற சிறுமி. இவர் இந்தப் படத்திற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கைதி திரைப்படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இது போன்ற நிலையில், மோனிகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.