மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கிறீங்க" காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
இவ்வாறு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியிருக்கிறார்.
இவ்வாறு சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதன் பின்னும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் அகர்வால், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு அம்மா மாதிரியா இருக்கிறீங்க? இவ்வளவு இளமையா இருக்கிறீங்களே? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.