மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீஸ் அதிகாரியாக கலக்க வரும் காஜல் அகர்வால்.. மீண்டும் நடிக்கவிருக்கும் திரைப்படம் எது தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். சமீபத்தில் திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். இதன் பின்பு சினிமாவிலிருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்டார்.
இதன் பிறகு தற்போது திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து உள்ள காஜல் அகர்வால், சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்குப் பின்பு 'சத்தியபாமா' என்னும் த்ரில்லர் கதை களத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.