மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகையை அறிவில்லாதவர் என்று திட்டிய காஜல் அகர்வால்.? என்ன நடந்தது.!
2008ம் ஆண்டு பரத் நடித்த "பழனி" திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடிக்கும் இவர், தெலுங்கில் ராம் சரண் தேஜாவுடன் நடித்த "மகதீரா" படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதன்பிறகு முன்னணி நடிகையாக வலம்வர ஆரம்பித்த காஜல், தமிழில் விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தமிழில் அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தற்போது ஷங்கரின் "இந்தியன்-2" படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் ஹிந்தி நடிகை ஹீனா கான் தென்னிந்திய நடிகைகள் குறித்து கேலி பேசியுள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காஜல், "உடலமைப்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள் சிலர். தென்னிந்திய ரசிகர்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படித்தான் நடிகைகள் இருக்க முடியும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.