மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த இடத்தில் கை வைத்த ரசிகர்.! ஷாக்கான காஜல் அகர்வால்.? என்ன நடந்தது.!?
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகை என்ற பெயர் பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். சினிமாவில் காலடி எடுத்து வைத்த குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு பெற்ற நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாகவே இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இது போன்ற நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க கேட்டபோது காஜல் அகர்வாலின் இடுப்பில் கை வைத்து விட்டார். இதற்கு காஜல் அகர்வால் கடுப்பில் ரசிகரை திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் அவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.