மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னோட கிரஷ் இவர்தான்! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை காஜல்! யாரை கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதனை தொடர்ந்து காஜல் நடிப்பில் ஹே சினாமிகா, ஆச்சார்யா, மும்பை சாகா, இந்தியன் 2, மொசகல்லு, பாரிஸ் பாரிஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் காஜல் சமீபத்தில் லைவ் டெலிகாஸ் என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். அது அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் தமிழ் சினிமாவில் எந்த நடிகர் மேல் உங்களுக்கு க்ரஷ்? என கேட்டதற்கு அவர் விஜய், அஜித் என கூறியுள்ளார். மேலும் யாராவது ஒருவரைதான் கூறவேண்டும் என்று கூறிய நிலையில் காஜல் விஜய் என கூறியுள்ளார். நடிகை காஜல் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் என மூன்று படங்களில் நடித்துள்ளார்