மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நினைத்தால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியுமா?!" மீனா குறித்து சர்ச்சையை கிளப்பிய கலா மாஸ்டர்..
1982 ஆம் ஆண்டு தனது 12வது வயதில் ஒரு நடன உதவியாளராக அறிமுகமானார் கலா. இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய "புன்னகை மன்னன்" படத்தில் தான் இவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து 1989ம் ஆண்டு "புதுப்புது அர்த்தங்கள்" படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து கலா மாஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். பல தேசிய விருதுகள், மாநில விருதுகளை வென்றுள்ள இவர், சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்திற்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் தனது நெருங்கிய தோழியான மீனா குறித்தும், அவரது இரண்டாவது திருமணம் குறித்தும் பேசினார். கலா மாஸ்டர் கூறினார் "மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி சாகர் இறந்த இரண்டாவது நாளில் இருந்தே வந்தது.
இந்த துயரத்தில் இருந்து மீண்டும் வர அவளுக்கு எத்தனை வருடங்கள் ஆகும்? என்னிடமே சிலர் இதுகுறித்துக் கேட்டிருக்கிறார்கள். நாங்களே விளையாட்டாக கேட்டால் கூட மீனா எங்களை முறைப்பாள். நினைத்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியுமா?" என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.