3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சிவகார்திகேயன்ட்ட பிடிச்சதே அந்த ஒண்ணுதான்! உண்மையை கூறிய பிரபல நடிகை!
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ப்ரியதர்சன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி நடித்திருந்தார்.
படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருந்தார் கல்யாணி. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கல்யாணி, சிவகார்த்திகேயனின் எனர்ஜியால் அவரை சுற்றியுள்ள அனைவர் முகத்திலும் எப்போதும் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும் எனவும், அவர் தன்னை சுற்றியுள்ளவர்கள் வளர வேண்டும், பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.