மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினிக்கு தயார் செய்த கதையில் கமல் நடித்த ஹிட் திரைப்படம்.. அது என்ன படம் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் 80களின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தனது இடத்தை நிலைநாட்டி வருகிறார்கள். தங்களது நடிப்பு திறமையின் மூலம் இலட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.
இப்படி 1996 ஆம் வருடம் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியானது 'இந்தியன்' திரைப்படம். இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
மேலும், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், இந்தியன் படத்தின் கதை ஷங்கர், ரஜினிக்காக எழுதியதாம். ரஜினிக்கு இப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தினாலும், கால்ஷீட் பிரச்சனையாலும், இந்தியன் திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே கமல் இப்படத்தில் நடித்து படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இச்செய்தி சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.