மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய கமல்.. கலக்கத்தில் இயக்குனர் வினோத்.!
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஹெச்.வினோத். தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வரவில்லை. அதற்கு காரணம் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் படத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தையும் முடித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் மணிரத்தினம் மற்றும் இயக்கம் திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வினோத் இயக்கம் திரைப்படத்திற்கு 'தலைவன் இருக்கின்றான்' என்ற டைட்டிலை வைக்கலாம் என்று கமல் முதலில் பரிந்துரை செய்ய வினோத் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போது அந்த டைட்டில் வேண்டாம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அதனால் இயக்குனர் வினோத் தற்போது புதிய டைட்டில் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.