மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வசூலை அள்ளும் விக்ரம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் உலகநாயகன் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
படம் வெளியாகி நாளுக்கு நாள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
இந்த நிலையில் விக்ரம் படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலையுயர்ந்த லெக்சஸ் காரை பரிசாக அளித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. லெக்சஸ் வகை காரின் விலை ரூ. 60 லட்சத்திலிருந்து ரூ. 2.50 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.