திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என் பதின்பருவ நண்பர்.. பிரபல நடிகரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்.!
பழம்பெரும் நடிகரான டிஎஸ் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா. இவர் கடந்த 1975ஆம் ஆண்டு வெளிவந்த மேல்நாட்டு மருமகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர், சாட்டை, நேர்கொண்ட பார்வை என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் ஜூனியர் பாலையா சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் மூச்சுத்திணறல் காரணமாக வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 70 வயது நிறைந்த அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில், பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) November 2, 2023