திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மாடியோவ்.. இவ்வளவா.! பிக்பாஸ் சீசன் 6; கமல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி மற்றும் இறுதியாக 5 வது சீசனில் ராஜு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த ஐந்து சீசன்களையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் 6வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் வார இறுதியில் இரு நாட்கள் வருகை தருவார்.
அந்த நாட்களில் கடந்த வாரத்தில் நடைபெற்ற டாஸ்க்குகள், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் கமல் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பரவி வருகிறது.
பிக்பாஸ் 5-வது சீசனை தொகுத்து வழங்க 55 கோடி சம்பளமாக வாங்கிய கமல் தற்போது 6வது சீசனுக்காக தனது சம்பளத்தை 20 கோடி உயர்த்தியுள்ளதாகவும் மொத்தம் 75 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது 15 நாட்கள் பங்கேற்க உள்ள அந்த நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு 5 கோடி வீதம் சம்பளம் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.