மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.! வித்தியாசமாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துவக்கத்தில் 21 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் துவங்கிய இரண்டாவது வாரத்தில் ஜி.பி முத்து தனது பிள்ளைகளை காண வேண்டும் என தானாக வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் மற்றும் மூன்றாவது வாரத்தில் அசல் கோலார் ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டனர். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மேலும் பிக்பாஸ் தொடங்கி 4வது வாரத்திலேயே வீட்டில் விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், போட்டியாளர்கள் கவன குறைவாக இருப்பதாகவும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி கண்டித்தார். மேலும் ஆயிஷா மற்றும் ஷெரீனா மலையாளத்தில் பேசிக் கொண்டனர். இதனையும் உலகநாயகன் சுட்டிகாட்டினார்.
இந்த நிலையில் கடந்த வாரம் விக்ரமன், அசீம், கதிரவன் ஆயிஷா, செரீனா ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றிருந்த நிலையில் ஷெரினா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை கமல் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முதலாக வித்தியாசமான முறையில் மலையாளத்தில் ஷெரினா என எழுதப்பட்ட சீட்டை காட்டி அறிவித்துள்ளார். பின்னர் தமிழில் எழுதிய சீட்டை காண்பித்துள்ளார்.