மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 திரைப்படத்தின் காட்சிகளை பார்த்து மிரண்டு போய் கமல்ஹாசன் செய்த செயல்.. அதிர்ச்சியடைந்த இயக்குனர்.!
தமிழ் சினிமா பலமான நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றிப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், கமலஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்' திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கு வெளிவரும் தருவாயில் உள்ளது.
இது போன்ற நிலையில், 'இந்தியன் 2' படத்தின் ஒரு சில காட்சிகளை கமலஹாசன் பார்த்து மிரண்டு போய் சங்கரை பாராட்டியுள்ளார். இதனோடு மட்டுமல்லாது இயக்குனர் சங்கருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசளித்தது இது உங்களது உச்சமாக இருக்கக் கூடாது இதையே படிப்படியாக முன்னேறி பெரும் உச்சத்தை தொட வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.