#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடிடி தளங்களை குறித்து அன்றே கணித்தார் கமலஹாசன்.. வைரலாக பரவும் பேட்டி.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவர் குழந்தை நட்சத்திரத்திலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். பல வேடங்களையும் ஏற்று நடிப்பதில் வல்லவராக இருக்கும் கமலஹாசனை உலக நாயகன் என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
சில காலமாக இவரது படங்கள் தோல்வியை அடைந்ததால் மனம் உடைந்து போன கமலஹாசன், சமீபத்தில் 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பிறகு தற்போது 'இந்தியன் 2' படத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கமலஹாசன் யாருடன் இணைந்து நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் ஓ டி டி தளங்களை பற்றி பேசி இருக்கிறார். "நான் அன்றே கூறினேன். யாரும் என்னுடைய கருத்தில் ஒத்துழைக்கவில்லை. நான் திரைப்படங்களை தயாரிப்பதோடு அந்த படங்களில் காசு போட்டு செலவு பண்ணுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகுவதால் பலர் நஷ்டம் அடைகின்றன என்று கூறியிருக்கிறார். இச்செய்தி தற்போது வைரலாகி பரவி வருகிறது.