#Breaking: கனல் கண்ணன் ஜாமின் மனு விவகாரம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!



Kanal Kannan Bail Rejected by Court

சர்ச்சை பேசினால் கைதான கனல் கண்ணனின் ஜாமின் மனு மீண்டும் நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட சண்டைக்காட்சி கலைஞர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களுக்கு எழுச்சி நாள் என்று பேசியிருந்தார். 

இவரின் பேச்சுக்கள் ஈ.வெ இராமசாமியின் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, திராவிடர் கழகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கைதான கனல் கண்ணன் 11 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

Kanal Kannan

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனல் கண்ணன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த நிலையில், அம்மனு விசாரணைக்கு பின்னர் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.