மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணகி படத்தின் க்ளைமேக்ஸ் இதுதான்: வரலாற்றில் முதல் முறையாக படக்குழு செய்த தரமான சம்பவம்.!
இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணகி. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
4 பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம், நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல், டிரைலர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. படம் வரும் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், படத்தின் முதல் ஸ்னீக் பீக் வீடியோ வெளியான நிலையில், படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளே படத்தின் கிளைமேக்ஸாக இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.