மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இது தெரியுமா? கண்ணான கண்ணே சீரியல் மீரா ஏற்கனவே விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் நடித்துள்ளாராம்!!
தற்போதைய காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் சன் டிவி தொடர்கள் என்றாலே அக்காலம் முதல் இக்காலம் வரை ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதற்கேற்றாற்போல் சன் தொலைக்காட்சியிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமான தொடர் கண்ணான கண்ணே. அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்தத் தொடரில் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இத்தொடரில் கதாநாயகியாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நிமிஷிகா. கண்ணான கண்ணே தொடரில் நடித்ததற்கு பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஆனால் நிமிஷிகா இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நீலாம்பரி என்ற துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இது குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.