மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! கருணாசுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.! தற்போது எப்படியிருக்கிறார் பாருங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கருணாஸ். மேலும் இவர் தமிழில் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதனை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய அவர் 2014ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் அம்பாசமுத்திரம் அம்பானி. இதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நவ்நீத் கவுர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய நவநீத் அதிரடியாக அரசியலில் களமிறங்கினார். மேலும் தீவிர அரசியலில் இறங்கிய அவர் முதலாவது முறை தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
மேலும் அவர் மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் அதே தொகுதியில்தான் நடிகை நவநீத் கணவர் ராணா யுவ ஸ்வபிமானி பக்ஷா கட்சி வெற்றி பெற்று எம்பி ஆக உள்ளார். நடிகை நவ்நீத் கவுர் விஜயகாந்துக்கு ஜோடியாக அரசாங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.