மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயவுசெய்து எதாவது செய்யுங்க.. நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரிடம் புலம்பும் அஜித் ரசிகர்கள்!! இதுதான் காரணமா?
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து படம் ஆகஸ்ட் 8 ல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் இப்படத்தை பெரிய விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளதால் ஏராளமான திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகலாம் என தமிழ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக அஜித்திற்கு பெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ள கர்நாடகா மற்றும் கேரளாவில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் குறித்த எந்த தகவல்களும் வெளி வரவில்லை
இந்நிலையில் வருத்தத்தில் இருக்கும் கர்நாடக அஜித் ரசிகர்கள், தயாரிப்பாளர் போனி கபூரிடம், கர்நாடகாவில் தல படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. மேலும் எந்த தியேட்டர்களில் வெளிவருகிறது எனவும் தெரியவில்லை விரைவில் ஏதாவது செய்யுங்கள் என புலம்பி வருகின்றனர்.
Dear @BoneyKapoor Sir We appreciate Your Promotions In #Tn.What Abo #Karnataka not even a Single Update Here
— Karnataka Ajith Fans Club (@karnataka_afc) 3 August 2019
After TN it's #KA where #Thala has Huge Market jst 5 Days Left Out don't be So Silent Do update us 🙏 we Hv plans Too @SureshChandraa @DoneChannel1@nerkondapaarvai