ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"ஜிகர்தண்டா படத்தை விரைவில் பார்க்கவுள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வீட்!" கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்". படத்தில் எஸ். ஜெ. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் 1975 காலக்கட்டத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது.
முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு நிறைய பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், படத்தின் வசூல் சிறப்பாக அமைந்து சாதனை புரிந்துள்ளது. தீபாவளிக்கு வெளியான படங்களில் கார்த்தியின் ஜப்பான் மற்றும் ஜிகதண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கு தான் நேரடிப் போட்டி இருந்தது.
இந்நிலையில், ஜப்பான் படத்தை பின்னுக்குத் தள்ளி, வசூலிலும், விமர்சனத்திலும் சாதனை படைத்துள்ள ஜிகர்தண்டா படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் இந்தியாவுக்கு ஷூட்டிங் வருவது போலவும், அவரை லாரன்ஸ் சந்தித்துப் பேசுவது போலவும் காட்சிகள் அமைத்திருந்தனர்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர், ஈஸ்ட்வுட்டை டேக் செய்து "டபுள் எக்ஸ் என்ற ஒரு படத்தில் உங்கள் சிறுவயது தோற்றத்தை காட்சிப்படுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார். அதற்கு ஈஸ்ட்வுட்டின் பக்கத்தில் இருந்து, அவர் இந்தப் படத்தை பார்க்கவில்லை என்று பதில் வந்துள்ளது. இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் பெருமிதத்தில் உள்ளதாக தெரிகிறது.