திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நான்கு வருடமாக இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்" கார்த்திக் சுப்புராஜின் உருக்கமான பேச்சு..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் முதன் முதலில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பீட்சா திரைப்படத்தை 2012 ஆம் ஆண்டு இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்திற்குப் பின்பு சூது கவ்வும், இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா, பென்குயின் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு ஒரு சில வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவில் அளித்திருந்தாலும் இறுதியாக இவர் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தின் தோல்விக்கு பின்பு எந்த படங்களையும் இயக்கவில்லை.
இது போன்ற நிலையில், சமீபத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபிள் எக்ஸ். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், "பேட்ட திரைப்படத்திற்கு பின்பு என்னுடைய படம் எதுவும் திரையில் வெளியாகவில்லை. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியடையும் எனும் நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் மிகவும் பதற்றமாக இருந்தது. இப்படத்திற்கு வாழ்த்து கூறியவர்கள் அனைவருக்கும் நன்றி. நாலு வருடமாக இந்த வெற்றிக்காக தான் காத்திருந்தேன்" என்றும் மனம் உருக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வருகிறது.