திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகியது இதனால்தான்.! முதல் முறையாக சீக்ரெட்டை உடைத்த கரு.பழனியப்பன்
தமிழ் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ்புல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கரு. பழனியப்பன். தொடர்ந்து அவர் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு மற்றும் நட்பே துணை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பார்த்திபன் கனவு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து கரு. பழனியப்பன் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் போன்ற சில படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து வந்த கரு.பழனியப்பன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்து கொண்டார். விவாதங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் திடீரென அவர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது பத்திரிகையாளர் ஆவுடையப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் கரு.பழனியப்பன் எதற்காக தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்பது குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஒரு இடத்தில் எனக்கும் சேனல் தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது. ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லை அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். மேலும் ஒருவரே எப்போதும் விட்டுக்கொடுத்து கொண்டிருக்கவே முடியாது. அங்கு சமமான நிலை ஏற்படவில்லை. அதனால் நான் விலகிவிட்டேன். நான் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நல்லபடியாக சென்று கொண்டுள்ளது என கூறியுள்ளார்.