அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அட அட.. "நான் சந்தித்ததில் மிகச்சிறந்த மனிதர் அஜித்., பார்த்ததுமே நெருக்கமாக ஒட்டிவிடுகிறார்" - தல அஜித்தை புகழ்ந்து தள்ளிய காஷ்மீர் ரசிகர்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம்வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எச். வினோத் இயக்கும் இப்படத்தில் அஜித்துடன், மஞ்சு வாரியர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் அஜித் பைக்கிலேயே இங்கிருந்து காஷ்மீரின் லடாக் பகுதி வரை சென்றுள்ளார்.
மேலும் கார்கில் போர் நினைவிடம் சென்ற அஜித், சல்யூட் அடித்து வீரமரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பயணித்த அவர், காஷ்மீரை சேர்ந்த முதியவர், ஷமி என்ற இளைஞர் மற்றும் ஒரு சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதுதொடர்பாக ஷமி, "நான் சந்தித்ததில் மிகவும் சிறந்த மனிதர் அஜித். பார்த்த சில நிமிடங்களிலேயே மனதிற்கு நெருக்கமான நண்பராக நம்முடன் ஒட்டிவிடுகிறார்" என்று பாராட்டியுள்ளார். இது தமிழகத்தையும் கடந்து காஷ்மீர் வரை அஜித் ரசிகர்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படமும், ஷமியின் பாராட்டும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.