திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வனிதாவின் ருசிகரமான பொய்.. கஸ்தூரி மற்றும் வனிதாவின் ட்விட்டர் சண்டை..
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் விஜய்க்கு ஜோடியாக 1995ம் ஆண்டு "சந்திரலேகா" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மாணிக்கம் படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013ம் ஆண்டு "நான் ராஜாவாகப் போறேன்" படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா, தற்போதைய சீசனுக்கு ரிவியூ கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் வனிதா, மர்ம நபர் ஒருவர் "ரெட் கார்டா கொடுக்குறீங்க?" என்று கேட்டு தாக்கியதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து ஒரு பேட்டியில்,"நடிகைக்கு முகம் தான் முக்கியம். ஆனால் நான் தாக்கப்பட்டது தெரியவேண்டும் என்றுதான் அந்த போட்டோவைப் பகிர்ந்தேன" என்று கூறியிருந்தார். அதற்கு நடிகை கஸ்தூரி, "அடிச்சவன் யாரோ. அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும்?
உங்கள் ரிவியூவால் வந்த வினை தான் இது. வனிதாவின் ருசிகரமான பொய்கள் விஜய்டிவிக்கு தான் கன்டென்ட்" என்று ட்விட்டரில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து வனிதா, "நான் ஒரு திறந்த புத்தகம். நான் நேர்மையானவள். கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என்று வனிதா கூறியுள்ளார்.