#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் சினிமாவில் வாரிசு அரசியலா! பிரபல நடிகர்களை மோசமாக பேசிய மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி!
தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், விஜய், சூர்யா போன்றோர் தங்களது அப்பாவின் மூலமாகவே நடிகர்கள் ஆனார்கள் எனவும் அவர்களை குறித்து தரக்குறைவாக பேசி மீரா மிதுன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி மீரா மிதுனை மோசமாக திட்டி வருகின்றனர்.
their fathers.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 6, 2020
AJITH sir, VIJAY SETHUPATHY, SIVAKARTHIKEYAN all examples of extremely talented stars who came up from scratch.
ONLY talentless unprofessional LOSERS will imagine conspiracy theories & complain of nepotism in Kollywood.
Ithula niraiya pesanum, will record video.
இந்நிலையில் மீராமிதுன் இவ்வாறு வாரிசு அரசியல் மற்றும் கோலிவுட் மாஃபியா குறித்து பேசுவது தொடர்பாக ரசிகர்கள் சிலர் கஸ்தூரியிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் திரையுலகில் வெற்றி பெற இரண்டு விஷயம் மட்டுமே உதவும். ஒன்று அளவில்லா திறமை, மற்றொன்று அதிர்ஷ்டம். இது அனைவருக்கும் பொருந்தும்.அதனால்தான் விஜய், சூர்யா, கார்த்தி ஜெயம் ரவி ஆகியோர் கடினமாக உழைத்து வெற்றி பெற்றுள்ளனர். இதற்கும் அவர்களது தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
மேலும் அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் எந்த பின்னணியும் இல்லாமல் தங்களது திறமையால் மட்டுமே முன்னேறியுள்ளனர். திறமை இல்லாமல் தோற்றவர்கள்தான் கோலிவுட்டில் வாரிசு அரசியல் உள்ளது என குறை கூறிக் கொண்டு மோசமாக பேசுவர். இதுகுறித்து நிறைய பேச வேண்டும். வீடியோ வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.