#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலர் தினம் பட நடிகையை நியாபகமிருக்குதா.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.?
1999 ஆம் வருடம் கதிர் என்பவர் இயக்கத்தில் குணால் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் காதலர் தினம். இதில் கதாநாயகியாக சோனாலி நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று மிகப் பெரும் வெற்றி அடைந்தது.
இப்படத்தில் நடித்த நடிகை சோனாலி இதன் பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாள மொழி சினிமாவில் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சோனாலி ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி கடினமான சிகிச்சைக்கு பின்பு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் நடிகை சோனாலியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. காதலர் தினம் படத்தில் நடித்த சோனாலியா இது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.