மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது கண்ணா இல்ல கரெண்ட்டா.! அசத்தலாக வெளிவந்த கதீஜா - ராம்போ லவ் ஸ்டோரி! நீங்க பாத்துட்டீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.
இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற நான் பிழை, டூ டூ டூ போன்ற பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது ராம்போ- கதீஜா லவ் ஸ்டோரி Dippam Dappam என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் இசையமைக்க, ஆண்டனி தாசன் பாடியுள்ளார். அது வைரலாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.