மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீச்சில் அரைகுறையாக... ரசிகர் கேட்டதால் மறுக்காமல் காற்றின் மொழி கண்மணி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவர்களும், சீரியலில் நடித்தவர்களும் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான தொடர் காற்றின் மொழி. இந்த தொடரில் ஹீரோவாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நடிக்கின்றார். மேலும் ஹீரோயினாக கண்மணி கதாபாத்திரத்தில் பிரியங்கா ஜெயின் நடித்து வருகிறார். அத்தொடரில் அவர் பாவாடை தாவணியில், வாய் பேசமுடியாத கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.
அவர் உண்மையில் பயங்கர மாடர்னாக இருக்கக் கூடியவர். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் பீச்சில் எடுத்த புகைப்படங்களை வெளியிடுங்கள் என கேட்டவுடனே அதனை மறுக்காமல் பிரியங்கா வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் காற்றின் மொழி கண்மணியா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.