மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது ஒவ்வொருவருக்கும் சொந்தம்.! உழைப்பாளர் தின ஸ்பெஷல்.! கவிஞர் வைரமுத்து அசத்தல் வாழ்த்து!!
இன்று மே 1. உழைப்பாளர்கள் தினம். நாட்டை உயர்த்திட, குடும்பத்தை காத்திட ஓடோடி வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொரு உழைப்பாளிகளுக்கும் இன்று அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் உழைப்பாளர்கள் தின வாழ்த்து கூறும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் அவர்,
"உழைப்பு, காதல், பசி
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்
அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்
தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துரியவர்கள்
இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை
எழுத்து வைரமுத்து
இசை இளையராஜா
குரல் ஜேசுதாஸ்
இந்தப் பாட்டு
இந்த மூவருக்கு மட்டுமல்ல
உழைக்கும் தோழர்
ஒவ்வொருவருக்கும் சொந்தம் எனக் கூறியுள்ளார்.
உழைப்பு, காதல், பசி
— வைரமுத்து (@Vairamuthu) May 1, 2024
இந்த மூன்றுமே
மண்ணுலகை இயக்கும்
மகா சக்திகள்
அந்த உழைப்பு
உரிமை பெற்றநாள்
இந்த நாள்
தூக்குக் கயிற்றுக்குக்
கழுத்து வளர்த்தவர்களும்
குண்டுகள் குடைவதற்காக
நெஞ்சு நீட்டியவர்களும்
வீர வணக்கத்துக்குரியவர்கள்
இந்தச் சிறப்பு நாளுக்கு
ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை… pic.twitter.com/owIP8uBEJC