மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே.! டாடா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிக்பாஸ் பிரபலமா..
சின்னத்திரையில் சீரியலில் நடித்து அறிமுகமானவர் கவின். பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மேலும் கவின் முதன்முதலாக லிப்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.
கணேஷ் கே பாபு என்பவரின் இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் டாடா. இப்படம் திரையரங்கில் வெளியாகி பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். அந்த அளவிற்கு இப்படம் நல்ல கதையாக இருந்ததால் ரசிகர்களின் மத்தியில் கவின் நல்ல நடிகராக பிரபலமடைந்தார்.
இது போன்ற நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. இதன்படி கவின் நடிப்பில் வெளியான 'டாடா' திரைப்படத்தில் முன்னதாக பிரதீப் நடிக்கவிருந்ததாக திரைத்துறை வட்டாரத்தில் பேசி வருகின்றனர். ஆனால் பிரதீப் கவினுக்காக இந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாக கூறப்பட்டு வருகிறது.