கவினுடன் ஜோடி சேரும் தளபதி பட நடிகை! அட.. யார்னு பார்த்தீங்களா!! வெளிவந்த சுவாரஷ்ய தகவல்!!



kavin-going-to-pair-with-beast-movie-heroine

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

பின்னர் கவின் வெள்ளித்திரையிலும் களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் லிப்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

kavin

அதனைத் தொடர்ந்து கவின் ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் ஊர்க்குருவி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் அவர் தற்போது இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளார். 
இந்தப் படம் தற்போதைய காலகட்ட காதலை சொல்லும் பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.