திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கவினின் காலேஜ் சூப்பர்ஸ்டார் பாடல் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்: இரண்டாவது இடத்தில இடம்பிடிப்பு.!
இயக்குனர் எலன் இயக்கத்தில், நடிகர்கள் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்து உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார்.
ரைஸ் ஈஸ்ட் படம் தயாரித்து வழங்கும் இத்திரைப்படம், 2024ம் ஆண்டில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், படத்தின் காலேஜ் சூப்பர்ஸ்டார் என்ற பாடல், நேற்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த பாடல் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாடல் வெளியான 1 நாளில் 1.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தொடர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.