53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இதற்காக கவின் இப்படியொரு முடிவை எடுத்தாரா? பிக்பாஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! ஆடிப்போன போட்டியாளர்கள்!!
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதி நிலைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என அறிந்துகொள்ள பார்வையாளர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நாளுக்கு நாள் மிகவும் கடினமான டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அதனை போராடி வென்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் செல்ல போட்டியாளர்கள் அனைவரும் முழுமூச்சுடன் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மகத், யாஷிகா, ஜனனி அய்யர் , ரித்விகா ஆகியோர் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து கலகலப்பாக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பட்டத்தை வெல்ல போவது ஒரு போட்டியாளர் மட்டுமே. எனவே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு செல்ல விரும்புவர்கள் வெளியேறலாம் என பிக்பாஸ் கூறியுள்ளார்.
இதனை கேட்டதும் கவின் எழுந்து நிற்கிறார். அவள் எழுந்ததும் லாஸ்லியா, சாண்டி என்ன செய்கிறாய் என அதிர்ச்சி அடைகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது மேலும் கவின் வீட்டைவிட்டு சொல்வாரா, மாட்டாரா என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
#Day94 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/MBbepWpIJD
— Vijay Television (@vijaytelevision) September 25, 2019