மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த உடனே கவின் மனைவி என் இன்ஸ்டாகிராம் போஸ்ட்.. லாஸ்லியாவை டேக் செய்யும் நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான சின்னத்திரை நடிகராக வலம் வந்தவர் கவின். இவர் தொகுப்பாளராகவும், சின்ன திரையில் சீரியல் நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவராக வலம் வந்தார் கவின்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலித்து சர்ச்சையில் சிக்கினார். மேலும் இறுதியாக லாஸ்லியாவை காதலிப்பதாக கூறி வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னும் இருவரும் காதலித்து வந்தனர் என்ற செய்தி வெளியானது.
இதனையடுத்து திடீரென்று லாஸ்லியா, கவின் பிரேக்கப் செய்தி வெளிவந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்பு இருவரும் தங்களது வழியில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இதன்பிறகு தற்போது மோனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக கவினின் மனைவி என்பதை பதிவாக போட்டிருக்கிறார். அப்பதிவில் இணையவாசிகள் லாஸ்லியாவை டேக் செய்து வம்பிழுத்து வருகின்றனர்.