மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க வந்து எங்க வீட்டுல பாத்தீங்களா.. பயில்வான் கேட்ட அந்த கேள்வி.! கடுப்பாகி கீர்த்தி பாண்டியன் கொடுத்த பதிலடி!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். அவர் தமிழில் தும்பா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின்னர் கீர்த்தி பாண்டியனுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் அவருடன் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அன்றே அவரது கணவர் அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபாநாயகன் திரைப்படமும் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் கண்ணகி படத்தின் பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கீர்த்தி பாண்டியனிடம், வீட்டுக்குள்ளதான் கணவன், மனைவி சண்டை என்றால் இந்த வாரம் தியேட்டரிலும் இருவரது படமும் மோதுகிறது. எந்த படம் வெற்றி பெறும்? என கேட்டுள்ளார். உடனே கோபமடைந்த கீர்த்தி பாண்டியன் நாங்க சண்டை போட்டதை நீங்க எங்க வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா? எங்களுக்குள் சண்டையும் இல்லை, எந்த போட்டியும் இல்லை என பதில் அளித்துள்ளார்.