மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒருத்தர் கூட காப்பாற்ற வரல! தண்ணி கூட இல்ல!" கீர்த்தி பாண்டியனின் கண் கலங்கிய பதிவு..
கடந்த இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னையையே புரட்டி போட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பால், போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
,
பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளதால் யாரும் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் வடிந்தாலும், வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் மும்பையில் இருந்து தனது அம்மாவின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த அமீர்கானும் இதில் மாட்டிக்கொண்டுள்ளார். இவரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாப்பூரில் வசிக்கும் நடிகர் அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியன் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அதில் "மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரியில் இருக்கும் ராதாகிருஷ்ணன் சாலையில், 48 மணிநேரமாக மின்சாரம் இல்லை. தரைத்தளம் முழுவதும் தண்ணீர் உள்ளது. பால் கூட கிடைக்கவில்லை. யாரும் வெளியே போகவும் வழியில்லை. யாரும் காப்பாற்றக் கூட வரவில்லை" என்று கூறியுள்ளார்.