மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மினி ஸ்கர்ட்டில் விஜய் சேதுபதி ரீல் மகள்!" வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் 2021ம் ஆண்டு "உப்பென்னா" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தமிழில் போர் வீரன், வா வாத்தியாரே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் முதல் படத்தில் நடித்தபோது இவருக்கு 17 வயது தானாம். சைக்காலஜி படித்துள்ள கீர்த்தி ஷெட்டிக்கு முதலில் விளம்பரப் படத்தில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததில், அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது மலையாளத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. முதல் படமான உப்பென்னாவில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 46 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது மினி ஸ்கர்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.