மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன் முறையாக 18 வயது ஹீரோயினுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்... அட இவரா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!
நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக 18 வயது தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் பாலா இயக்கும் ’சூர்யா 41’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.