மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நாற்பது வயதிலும் திரீசா அந்த விஷயத்துல ஸ்டாராங்" தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி பேட்டி
கோலிவுட் திரை உலகை முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா மாடலழகியான த்ரிஷா கிருஷ்ணன், தமிழில் 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இதன்பிறகு சாமி, கில்லி, லேசா லேசா, ஆறு, சம்திங் சம்திங், அபியும் நானும், வின்னைதாண்டி வருவாயா போன்ற படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றார். இவரின் நடிப்பாலும், அழகாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இவரின் நடிப்புதிறமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதுபோன்ற நிலையில், தெலுங்கு மொழியில் 'உப்பண்ணா' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கீர்த்தி செட்டி த்ரிஷாவை பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அப்பேட்டில் கீர்த்தி செட்டி கூறியதாவது, "எனக்கு பிடித்த நடிகை திரிஷா நாற்பது வயது தாண்டியும் திரிஷா இவ்வளவு இளமையாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பெருமையாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.