மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதெல்லாம் சுத்தப்பொய்.. நம்பாதீங்க! பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!!
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள்ளார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தளபதி 66வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தளபதியின் 66வது படமான இதனை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடனே இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில், தளபதி 66-வது படத்தில் நான் நடிக்கவில்லை. அவர் ஜோடியாக நான் நடிப்பதாக வெளிவந்த தகவல் வதந்தி என தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.