மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகேஷ் பாபுவிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! ஏன் அப்படி என்னதான் நடந்தது?
தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாரான மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ’சர்காரு வாரி பாட்டா’. இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார். படம் உலகெங்கும் வரும் 12ஆம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், ஒரு நாள் ஷூட்டிங்கின் போது மகேஷ்பாபுவின் முகத்தில் தவறுதலாக அடித்து விட்டேன். உடனே நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
ஆனால் அவர் ’அதனால் ஒன்றுமில்லை கவலைப்பட வேண்டாம்’ என பெருந்தன்மையாக கூறினார். ஆனாலும் என்னால் முடியவில்லை. 3 முறை அவரிடம் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டேன். ஆனாலும் அவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டது எனக்கு நிம்மதியை தந்தது எனக் கூறியுள்ளார்.