திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
130 பேருக்கு தங்கக்காசு பரிசு வழங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்... வியந்து பாராட்டும் ரசிகர்கள்..! குவியும் வாழ்த்துக்கள்.!
தமிழ் & மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், பென்குயின், அண்ணாத்த உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவரின் கைவசம் இருக்கும் மாமன்னன், சைரன், ரகதாதா படங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறது. இந்நிலையில், அவரின் நடிப்பில் உருவாகி வரும் தசரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.
இதனையடுத்து, படப்பிடிப்பு முடிந்ததையொட்டி படப்பிடிப்பில் பணியாற்றிய 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயத்தை பரிசாக கீர்த்தி சுரேஷ் வழங்கியுள்ளார். இது பாராட்டுகளை குவித்து வருகிறது.