மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ட்விட்டரில் ட்ரெண்டிங்கான கீர்த்தி சுரேஷ்... மனதை மயக்கும் புகைப்படங்கள்!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் ரஜினி முருகன், ரெமோ மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
முகபாவனையோடு யதார்த்தமான நடிப்புத் திறமையும் கொண்ட இவர் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் ஃபகத் பாஸில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய போட்டோ ஷூட் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார். அதுபோல இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் மிகவும் ட்ரெண்டாக உள்ளன.
Wooow Stunning @KeerthyOfficial #KeerthySuresh #KollywoodCinima pic.twitter.com/ADpBabsIXw
— Kollywood Cinima (@KollywoodCinima) May 28, 2023