திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. என்னா போஸ்.! சின்ன வயசுல நடிகை கீர்த்தி எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!! கூட யார்னு தெரியுமா?? வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் அவர் தனது நடிப்பு திறமையால் அதிகம் ரசிகர்களை பெற்றார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கீர்த்தி சுரேஷுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் தற்போது உடல் எடையை பெருமளவில் குறைத்து செம கிளாமராகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த 'சாணிக் காயிதம்' மற்றும் 'சர்காரு வாரி பாட்டா' படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷின் அக்காவும் உடன் இருந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இப்போது மாதிரியே அப்பவும் அவர் செம கியூட்டாக இருக்காரே என கூறி வருகின்றனர்.