மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறு வயதிலேயே, சூப்பர் ஸ்டார் நடிகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் இந்த புகைப்படத்தை நீங்க பார்த்துருக்கீங்களா!!
தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது செல்வராகவனுடன் சாணிக் காயிதம், ரஜினியுடன் அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் உள்ளன. மேலும் அவர் தெலுங்கில் நடிகர் நிவினுடன் ஒரு படம், மற்றும் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தான் சிறுவயதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.