திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே இப்படி ஆகிருச்சே! திடீரென பாலிவுட் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்! வெளியான அதிர்ச்சி காரணம்!
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் அந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு பிரபலமான கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே பெரும் இடத்தைப் பிடித்து, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் உருவானது. அதனைதொடர்ந்து தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அனைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். மேலும் அவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மைதான் என்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதனைத் தொடர்ந்து அவர் தீவிர உடற்பயிற்சி செய்து பெருமளவில் உடல் எடையை குறைத்தார்.
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக்கதையை கொண்டு உருவாகும் இப்படத்தில் அஜய் தேவகன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்தார். மேலும் இதன் ஷூட்டிங்கிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் தற்போது விலகியுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக, ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தோம். அப்பொழுது அவர் அதற்குரிய தோற்றத்தில் இருந்தார். ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகிவிட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்தோற்றம் சரியாக பொருந்தவில்லை என படக்குழு அறிவித்துள்ளது.