திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கீர்த்திசுரேஷா இது.! ஆள் அடையாளமே தெரியலையே.. புகைப்படத்தை கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் கீர்த்திசுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த நடிகையர்திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறினர்.
மேலும் விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில் இருந்தார். மேலும் தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதனைதொடர்ந்து தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் என்பவர் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.